முன்னாள் போப்பாண்டவர் உடல்நிலை கவலைக்கிடம் - பிரார்த்தனை செய்ய வேண்டுகோள் விடுத்த போப் பிரான்சிஸ்

#போப்பாண்டவர் #Pop Francis #Health #people
Prasu
3 years ago
முன்னாள் போப்பாண்டவர் உடல்நிலை கவலைக்கிடம் - பிரார்த்தனை செய்ய வேண்டுகோள் விடுத்த  போப் பிரான்சிஸ்

உலக கத்தோலிக்கர்களின் தலைவராக இருப்பவர் போப் பிரான்சிஸ். இவருக்கு முன்பு போப்பாண்டவராக 16-ம் பெனடிக்ட் இருந்து வந்தார். 

உடல் நலக்குறைவு காரணமாக அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்பு அவர் வாடிகனில் உள்ள குருமடத்தில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். 

95 வயதாகும் அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக வாடிகன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு சிகிச்சை பெற்று வரும் ஓய்வுபெற்ற போப்பாண்டவர் 16-ம் பெனடிக்ட்டின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 

இதுபற்றி இப்போதைய போப் பிரான்சிஸ் வாடிகன் தேவாலயத்தில் நடந்த பிரார்த்தனையின் போது தெரிவித்தார். 

அப்போது போப்பாண்டவர் பெனடிக்டின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4