இஸ்ரேலில் 4ஆண்டுகளில் நடந்த 5-வது பொது தேர்தலில் மீண்டும் பிரதமராக பதவியேற்றார் நெதன்யாகு

#Israel #Prime Minister
Prasu
1 year ago
இஸ்ரேலில் 4ஆண்டுகளில் நடந்த 5-வது பொது தேர்தலில் மீண்டும் பிரதமராக பதவியேற்றார் நெதன்யாகு

இஸ்ரேலில் கடந்த மாதம் பொதுத்தேர்தல் நடந்தது. இது அங்கு 4 ஆண்டுகளில் நடந்த 5-வது பொதுத்தேர்தல் ஆகும். 

இத்தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகும்- யாயிர் லாபிட் இடையே நேரடி போட்டி நிலவியது. இந்நிலையில் நடந்த தேர்தலில் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி கூட்டணி 64 இடங்களை பிடித்து ஆட்சி அமைத்துள்ளது. 

எதிர்த்து போட்டியிட்ட கூட்டணிக்கு 51 இடங்கள் மட்டுமே பெற்றது. நெதன்யாகுவின் லிகுட் கட்சி சுமார் 32 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 

இதன்மூலம், பெரும்பான்மையுடன் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், இஸ்ரேல் பாராளுமன்றத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. 

இதில் மொத்தம் உள்ள 120 உறுப்பினர்களில் 63 பேர் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவாகவும், 54 பேர் எதிராகவும் வாக்களித்தனர். 

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து இஸ்ரேல் பிரதமராக ஆறாவது முறையாக பெஞ்சமின் நெதன்யாகு பதவியேற்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!