தென்கொரியாவில் குகைப்பாதையில் ஏற்பட்ட தீ விபத்து -6 பேர் உயிரிழப்பு-பலர் வைத்தியசாலையில் அனுமதி

#SouthKorea #தீ_விபத்து #குகை #Death
Prasu
3 years ago
தென்கொரியாவில் குகைப்பாதையில் ஏற்பட்ட தீ விபத்து -6 பேர் உயிரிழப்பு-பலர் வைத்தியசாலையில் அனுமதி

தென்கொரியாவின் தலைநகரான சியோல் அருகே உள்ள கியோங் என்ற பகுதியில் தரைக்கு மேலே செல்லும் குகைப்பாதை ஒன்று உள்ளது. 

இந்த குகைப்பாதையில் முன்தினம் பகலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்து 140-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். 

அவர்கள் அங்கு கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். 

மேலும் அங்கு வெளியான நச்சுப்புகையை சுவாசித்த 20 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்களை தீயணைப்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசாரின் விசாரணையில் இந்த வழியாக சென்ற லாரியும், பஸ்சும் மோதிய விபத்தில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4