முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொடவின் குற்றச்சாட்டை மறுத்த கேஹலிய ரம்புக்வெல்ல

#SriLanka #Minister #கேஹலிய #கட்சி
Prasu
1 year ago
முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொடவின் குற்றச்சாட்டை மறுத்த கேஹலிய ரம்புக்வெல்ல

முன்னணி சோசலிசக் கட்சியின், கல்விச் செயலாளர் புபுது ஜாகொடவின் குற்றச்சாட்டை சுகாதார அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல மறுத்துள்ளார்

இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் கறுப்புப்பட்டியில் உள்ளடக்கப்பட்டுள்ள இந்தியாவின் கௌசிக் மருந்து நிறுவனத்திடமிருந்து மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்ய அமைச்சர் முனைவதாக புபுது ஜாகொட சுமத்திய குற்றச்சாட்டையே அமைச்சர் மறுத்துள்ளார்.

அண்மையில் இந்தியாவுக்கு சென்றிருந்த அமைச்சர், கௌசிக் மருந்து  நிறுவனத்தின் செலவில், ஐந்து நட்சத்திர விருந்தகத்தில் தங்கியிருந்ததாக ஜாகொட சுமத்திய குற்றச்சாட்டையும் அமைச்சர் மறுத்தார்.

இந்தியாவுக்கான விமானச் செலவை தமது நண்பர் ஒருவர் செலுத்தியதாகவும், அதனை தாம் திருப்பிச் செலுத்தியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அடுத்த மூன்று மாத காலத்திற்கு தேவையான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

இந்தநிலையில் ஜனாதிபதியின்  அறிவுறுத்தல்களை புறக்கணித்து, தாம் மருந்துகளை கொள்வனவு செய்ய முயற்சிப்பதாக கூறப்படுவதையும் அமைச்சர் நிராகரித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!