சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் கோவிட் 19 உயிரிழப்புக்கள்! ஒருவார காலத்திற்குள் பலர் மரணம்
#Switzerland
#swissnews
#Covid 19
#Covid Variant
#Corona Virus
Mayoorikka
2 years ago

சுவிட்சர்லாந்தில் ஒருவார காலத்திற்குள் கோவிட் 19 இன் பாதிப்பினால் அதிகளவான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளது.
கடந்த வாரம் 17 கோவிட்உயிரிழப்புக்கள் பதிவாகியிருந்த நிலையில் இந்த வாரம் குறித்த எண்ணிக்கை 25 ஆக உயர்வடைந்துள்ளது.
கடந்த வாரம் 61374 கோவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்த வாரம் 69173 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை கடந்த வாரத்தை விடவும் இந்த வாரம் குறைவானதாக பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
கோவிட் பெருந்தொற்று உயிரிழப்பு வீதம் ஒரு மாத கால இடைவெளியில் வீழ்ச்சியடைந்து 18.4 வீதமாக மாற்றமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே உலகளாவிய ரீதியில் மீண்டும் தலைதூக்கும் கோவிட் தொற்று காரணமாக பல நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.



