பிரித்தானியாவில் ஒன்லைனில் மடிகணினிக்கு பணம் செலுத்திய நபருக்கு ஏற்பட்ட ஏமாற்றம்

#UnitedKingdom #world_news #Britain #Amazon #Complaint
Nila
1 year ago
பிரித்தானியாவில் ஒன்லைனில் மடிகணினிக்கு பணம் செலுத்திய நபருக்கு ஏற்பட்ட ஏமாற்றம்

பிரித்தானியாவில் ஒன்லைனில் மடிக்கணினிக்கு பணம் செலுத்திய நபர் ஏமாற்றப்பட்ட செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 

ஒன்லைனில் MacBook Pro ஒடர் செய்தவருக்கு Pedigree நாய் உணவு கிடைத்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த முன்னாள் கணினி மேலாளர் ஆலன் வூட் என்ற நபரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

நவம்பர் 29ஆம் திகதி அமேசானில் தனது மகளுக்காக 1,205 பவுண்ட் மதிப்புள்ள MacBook Pro ஒன்றை ஒர்டர் செய்திருக்கிறார். 

அடுத்தநாளே டெலிவரி வேண்டுமென அவர் ஓர்டர் செய்துள்ளார். அதேபோல் அடுத்தநாள் பார்சல் வந்துள்ளது. மேக்புக் என திறந்துபார்த்தபோது, அந்த பார்சலில் இரண்டு Pedigree நாய் உணவு இருந்துள்ளது. 

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆலன், ஒருவேளை ஆர்டர் மாறியிருக்கலாம் என மனதை தேற்றிக்கொண்டு அமேசானை தொடர்புகொண்டுள்ளார். ஆனால் முதலில் அவருக்கு பணத்தை திருப்பித்தர அமேசான் மறுத்திருக்கிறது.

பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஒருவழியாக அமேசான் தனது தவறை ஒப்புக்கொண்டு ஆலனிடம் மன்னிப்பு கோரியதுடன், பணத்தை திருப்பி தருவதாகவும் உறுதியளித்திருக்கிறது.

தனது மோசமான அனுபவம் குறித்து ஆலன், மெட்ரோ இதழுக்கு அளித்த பேட்டியில், “ 1,205 பவுண்ட் மதிப்புள்ள மேக்புக்கிற்கு பதிலாக பார்சலை திறந்தவுடன் நாய் உணவை பார்த்தபோது எனது முக பாவனை எப்படி மாறியிருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள். ஆரம்பத்தில் இந்த குளறுபடி சரியாகிவிடும் என நான் நினைத்தேன். ஆனால் அமேசான் வாடிக்கையாளர் சேவையிடம் பேசியபிறகே நிலைமையை புரிந்துகொண்டேன். 

என் கைக்கே வராத லேப்டாப்பை ரிடர்ன் செய்யும்வரை அவர்களால் எனக்கு உதவ முடியாது என கூறிவிட்டனர். எனக்கு வந்த நாய் உணவு பார்சலை அவர்களுக்கு திருப்பி அனுப்பியும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

15 மணிநேரத்திற்கும் அதிகமாக அமேசான் வாடிக்கையாளர்கள் சேவை நிர்வாகிகள் மற்றும் மேனேஜர்களிடம் பேசினேன். ஆனால் அவர்கள் எனது அழைப்பை அடுத்த பிரிவு மாற்றிவிட்டனர். இருப்பினும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் ஒரே மாதிரியாகவே முடிந்தன” என்று கூறினார்.

இதுகுறித்து அமேசான் செய்தி தொடர்பாளரிடம் கேட்டபோது, அவர் ஆலனிடம் மன்னிப்பு கோரினார். மேலும், தற்போது அந்த வாடிக்கையாளர் சேவையிடம் நேரடியாக தொடர்பில் இருப்பதாகவும், மன்னிப்புக் கேட்டதாகவும் மற்றும் பிரச்னையை முடித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!