பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் இந்த நாட்டுக்கு சாபக்கேடு...- சோபித தேரர்
#Colombo
#Buddha
Prathees
2 years ago

பௌத்த மதத்தை வெட்கப்படுத்தும் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் இந்த நாட்டுக்கே சாபக்கேடு என வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் மாத்திரமே மாணவர்கள் கல்வி பயில்வதாகவும், எஞ்சிய பல்கலைக்கழகங்களையும் இராணுவத்திடம் ஒப்படைத்தால் நல்லது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைக்கு பௌத்த மற்றும் பாலி பல்கலைகழகத்தை கட்டுப்படுத்துபவர்களே காரணம் எனவும், குழந்தைகளையே குற்றம் சாட்டி தப்ப முடியாது எனவும் அவர் கூறுகிறார்.
பொய் சொல்லி சம்பளம் வாங்குவது தவறு என்றும், முடியாவிட்டால் வேலையை விட்டுவிட வேண்டும் என்றும் நிர்வாகம் கூறுகிறது.
இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.



