மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தினால் காத்திருக்கும் அதிர்ச்சி!
2023ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மின்சார கட்டண திருத்தமானது குறைந்த மின்சார பாவனையை கொண்ட நுகர்வோருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தம் நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய திருத்தத்தின் கீழ், 0 முதல் 60 அலகு வரையிலான பிரிவின் கீழ் ஒரு அலகுக்கான கட்டணமும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களும் திருத்தப்பட்டுள்ளன.
இதன்படி, 8 ரூபாயாக இருந்த அலகுக்கான கட்டணத்தை 30 ரூபாயாகவும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 120 ரூபாயில் இருந்து 400 ரூபாயாகவும் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
புதிய திருத்தத்தில் அலகுக்கான கட்டணம் 10 ரூபாயில் இருந்து 37 ரூபாயாகவும், 31-60 அலகுகளுக்கு நிலையான கட்டணம் 240 ரூபாயில் இருந்து 550 ரூபாயாகவும் உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
60 யூனிட்டுகளுக்கு மேல் உள்ள பிரிவின் கீழ் உள்ள ஒரு அலகுக்கான கட்டணம் மற்றும் நிலையான கட்டணமும் புதிய திருத்தத்தின் மூலம் அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும் 16 முதல் 60 வரை இருந்த அலகுக்கான கட்டணத்தை ரூ.42 ஆக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், நிலையான கட்டணம் ரூ.650 ஆக புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
61-90 அலகுகளுக்கு 16 ரூபாவாக இருந்த அலகுக்கான கட்டணத்தை 42 ரூபாவாகவும், 360 அலகுகளுக்கான நிலையான கட்டணத்தை 650 ரூபாவாகவும் உயர்த்த புதிய திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
91 முதல் 120 அலகுகள் வரை, அலகு ஒன்றுக்கு ரூ.50 ஆக இருந்த கட்டணம் திருத்தியமைக்கப்படாமல், ரூ.960 ஆக இருந்த நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை ரூ.1,500 ஆக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
121 முதல் 180 யூனிட் வரை, 75 ரூபாயாக இருந்த அலகுக்கான கட்டணம் திருத்தியமைக்கப்படாமல், 960 ஆக இருந்த நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டும் 1500 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
181 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அலகுக்கான கட்டணம் ரூ.75ல் இருந்து மாறாது என்றும், நிலையான கட்டணம் ரூ.1500 முதல் ரூ.2000 வரை புதிய திருத்தத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
நுகர்வு நேரத்தின்படி, இரவு 10.30 மற்றும் காலை 5.30 வரை 30 ரூபாயாக இருந்த அலகுக்கான கட்டணம் 40 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. நிலையான கட்டணம் 1500 ரூபாயிருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மத ஸ்தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு, 0-30 அலகுகளுக்கான கட்டணம் ரூ.8ல் இருந்து ரூ.30 ஆகவும், நிலையான அலகுக்கான கட்டணம் ரூ.90ல் இருந்து ரூ.400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
31ல் இருந்து 90 அலகுகள் வரை அலகுக்கான கட்டணம் ரூ.15ல் இருந்து ரூ.37 ஆகவும், நிலையான கட்டணம் ரூ.120ல் இருந்து ரூ.550 ஆகவும் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
91-120 அலகுகள் வரை அலகுக்கான ரூ.20ல் இருந்து ரூ.42 ஆகவும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ.120ல் இருந்து ரூ.650 ஆகவும் உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் மத ஸ்தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு அலகு ஒன்றுக்கு ரூ.32ல் இருந்து ரூ.50 ஆகவும், நிலையான விலை ரூ.1,500 முதல் ரூ.2,000 ஆகவும் உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.