உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணி பாண்ட்யா சகோதரர்கள்

#India Cricket
Prasu
3 years ago
உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணி பாண்ட்யா சகோதரர்கள்

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்தது. 

ஜனவரி 3-ம் தேதி தொடங்கும் இலங்கை தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள் எனவும் அறிவிப்பு வெளியானது. 

ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டனாகவும் செயல்படுகின்றனர். 

இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை பாண்ட்யா சகோதரர்கள் இன்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். 

இதுதொடர்பாக ஹர்திக் பாண்ட்யா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், உங்களுடன் விலைமதிப்பற்ற நேரத்தைச் செலவிட எங்களை அழைத்ததற்கு நன்றி. உங்களை சந்தித்தது பெருமையாகவும், பாக்கியமாகவும் இருந்தது என குறிப்பிட்டுள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4