கொரோனாவை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் நீக்கப்படுவதாக அறிவித்த இந்தோனேசியா

#Indonesia #Covid 19
Prasu
3 years ago
கொரோனாவை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் நீக்கப்படுவதாக அறிவித்த இந்தோனேசியா

அமெரிக்கா, பிரேசில், கொரியா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகமாக பரவத் தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில், இந்தோனேசிய அரசு கொரோனா விதிமுறைகள் நீக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறது. அந்நாட்டு அதிபரான ஜோகோ விடோடோ கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

அந்நாட்டில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தில் 1.7 நபர்கள் என்ற அளவிற்கு குறைந்துவிட்டது. கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறைந்ததால், கொரோனாவிற்கு எதிரான கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4