கதிர்காமத்தில் இருந்து கொழும்புக்குச் சென்ற பேருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

#Accident #Bus
Prathees
3 years ago
கதிர்காமத்தில் இருந்து கொழும்புக்குச் சென்ற  பேருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம மற்றும் பின்னதுவ இடையே 88 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்தே விபத்துக்குள்ளானது.

சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் குறித்த பஸ் வீதியை விட்டு விலகி சுமார் 100 மீற்றர் தூரம் பயணித்து பாறையில் கவிழ்ந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4