கொரோனா தொற்றால் கடுமையான சவால்- அனைவரும் ஒற்றுமையாக செயல்பட சீன ஜனாதிபதி வேண்டுகோள்

#China #Corona Virus #Covid 19 #President #people
Prasu
2 years ago
கொரோனா தொற்றால் கடுமையான சவால்- அனைவரும் ஒற்றுமையாக செயல்பட சீன ஜனாதிபதி வேண்டுகோள்

புத்தாண்டு தினத்தையொட்டி சீன அதிபர் ஜின்பிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- உலகளவில் 2-வது பெரிய பொருளாதார நாடாக சீனா தொடர்ந்து உள்ளது. 

பொருளாதாரம் சீராக வளர்ந்து வருகிறது. உலகளவில் உணவு நெருக்கடி ஏற்பட்ட போதும் சீனாவில் தானிய விளைச்சல் சிறப்பாக உள்ளது. 

புது வகை கொரோனா தொற்று மற்றும் கட்டுப்பாடு புதிய கட்டத்தில் உள்ளது. சீனா கடுமையான சவால்களை எதிர் கொண்டுள்ளது. 

அனைவரும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு நம்பிக்கை மற்றும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அப்போது தான் வெற்றி உறுதியாக கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!