காபூல் ராணுவ விமான நிலையத்தில் பிரதான வாயில் அருகே குண்டுவெடிப்பு- 10 பேர் உயிரிழப்பு

#Pakistan #BombBlast
Prasu
3 years ago
காபூல் ராணுவ விமான நிலையத்தில் பிரதான வாயில் அருகே குண்டுவெடிப்பு- 10 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ விமான நிலையத்திற்கு வெளியே இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. 

விமான நிலையத்தின் பிரதான வாயில் அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் குறைந்தது 10 பேர் பலியானதாகவும், 8 பேர் பலத்த காயமடைந்ததாகவும், தலிபான் உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறியிருக்கிறார். 

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஏற்கனவே தக்கார் மாகாண தலைநகர் தலுக்கான் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்த நிலையில், அடுத்த 3 நாட்களுக்குள் மீண்டும் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. 

உள்நாட்டு போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் கடந்த சில மாதங்களாக குண்டுவெடிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4