புத்தாண்டு தினத்தில் கிளிநொச்சி விநாயகபுரத்தில் இளைஞன் படுகொலை

#Kilinochchi #Murder
Prathees
3 years ago
புத்தாண்டு தினத்தில் கிளிநொச்சி விநாயகபுரத்தில் இளைஞன் படுகொலை

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில்  இளைஞன் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நெற்று அதிகாலை 4 மணியளவில் நடைபெற்றுள்ளது. 

வீடு புகுந்த நபர்கள் 26 வயதுடைய தவக்குமார் சுரேஸ் என்ற இளைஞனை கத்தியால் குத்தியும், பலமாக தாக்கியுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் அயலவர்கள் மற்றும் உறவினர்களால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் வழியிலேயே உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4