அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 04.01.2023

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 04.01.2023

மேஷம்: 
அசுவினி : உங்கள் செயல் திறனால் நினைத்ததை சாதித்து மகிழ்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
பரணி : குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உற்சாகமான நாள்.
கார்த்திகை 1 : எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். அரசு வழியிலான முயற்சி நிறைவேறும்

ரிஷபம்: 
கார்த்திகை 2, 3, 4 : திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும்.
ரோகிணி : கடவுள் வழிபாட்டில் மனம் செல்லும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.
மிருகசீரிடம் 1, 2 : சிந்தித்து செயல்படுவதால் செலவு குறையும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.

மிதுனம்: 
மிருகசீரிடம் 3,4 : பழைய பிரச்னை ஒன்று மீண்டும் பெரிதாகும். நண்பர்கள் உதவுவார்கள்.
திருவாதிரை : திட்டமிட்ட செயலிலும் செலவு அதிகரிக்கும். அலைச்சல் உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3 : பயணத்தில் சங்கடம் தோன்றும் வாகனத்தை மாற்றும் யோசனை உண்டாகும்.

கடகம்: 
புனர்பூசம் 4 : நினைத்ததை நிறைவேற்றி மகிழ்வீர்கள். எதிர்பாராத வரவால் நிதி நிலை உயரும்.
பூசம் : நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னை முடிவிற்கு வரும். புதிய முயற்சி லாபமாகும்.
ஆயில்யம் : உங்கள் விருப்பம் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.

சிம்மம்: 
மகம் : எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். லாபம் அதிகரிக்கும்.
பூரம் : கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். புதிய முயற்சி ஒன்றில் முன்னேற்றம் காண்பீர்கள்.
உத்திரம் 1 : கடந்த கால அனுபவங்களுடன் ஒரு முயற்சியில் லாபம் காண்பீர்கள்

கன்னி: 
உத்திரம் 2, 3, 4 : குடும்பத்தினர் நலனில் கவனம் செலுத்துவீர்கள். சொத்து வாங்கும் முயற்சி பலிக்கும்.
அஸ்தம் : பிள்ளைகள் செயல்களால் சங்கடத்திற்குள் ஆளாவீர்கள். மனதில் குழப்பம் உண்டாகும்.
சித்திரை 1, 2: பண வரவில் இருந்து வந்த தடை விலகும். எதிர்பார்த்த தொகை வந்து சேரும் நாள்

துலாம்: 
சித்திரை 3, 4 : உங்கள் செயல்களில் கவனம் தேவை. புதிய முயற்சி இன்று வேண்டாம்.
சுவாதி : வெளியூர் பயணங்களில் சங்கடங்களை சந்திப்பீர்கள். செயலில் குழப்பம் ஏற்படும்.
விசாகம் 1, 2, 3: நிதானமாக செயல்படுவதால் இழப்புகளை தவிர்க்கலாம். விழிப்புணர்வு தேவைபடும் நாள்.

விருச்சிகம்: 
விசாகம் 4 : தம்பதிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அனுஷம் : குடும்பத்தில் ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த வரவு வரும்.
கேட்டை: உறவினர் ஒருவர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுசு: 
மூலம் : நண்பரின் அவசரம் அறிந்து உதவி செய்வீர்கள். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
பூராடம் : பூர்வீக சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளைப் பேசி தீர்ப்பீர்கள்.
உத்திராடம் 1 : வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.

மகரம்: 
உத்திராடம் 2, 3, 4 : தடைபட்ட செயலை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருவோணம் : நேற்றைய எண்ணம் ஒன்று நிறைவேறும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
அவிட்டம் 1, 2 : எதிர்பாராத லாபம் உண்டாகும். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து செயல்படுவீர்கள்.

கும்பம்: 
அவிட்டம் 3, 4 : எதிர்பாராத பயணம் ஏற்படும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள்.
சதயம் : தடைபட்ட ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். லாபநிலை உண்டாகும்.
பூரட்டாதி 1, 2, 3 : நண்பருடன் ஒரு முயற்சியை மேற்கொள்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்.

மீனம்: 
பூரட்டாதி 4 : துணிச்சலுடன் ஒரு செயலில் ஈடுபடுவீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
உத்திரட்டாதி : உங்கள் பேச்சுக்கு வெளியிடத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டாகும்.
ரேவதி : உறவினருடன் ஏற்பட்ட பகை விலகும். உங்கள் ஆற்றல் வெளிப்படும்.