பாடகி சுஜீவாவின் மற்றுமொரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியீடு: குற்றப் புலனாய்வுப் பிரிவில் புகார்

#SriLanka #Police #Crime #Crash
Mayoorikka
3 years ago
பாடகி சுஜீவாவின் மற்றுமொரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியீடு: குற்றப் புலனாய்வுப் பிரிவில் புகார்

தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்கள் மூலம் வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக பாடகி கே சுஜீவா கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் புகார் அளித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 31ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற இசைக் கச்சேரியில் பாடுவதற்காகச் சென்ற போது ஏற்பட்ட வாகன விபத்து தொடர்பான காணொளிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

தான் மது அருந்தியதில்லை என்றும், மது அருந்த மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"நான் ஒருபோதும் மது அருந்தியதில்லை,   நான் குடிபோதையில் இருந்திருந்தால், போலீசார் என்னை சோதனை செய்து கைது செய்திருப்பார்கள். 

இரண்டு குழந்தைகளை வளர்த்து  தனியாக இருக்கிறேன்  என்ற கோபத்தில் இப்படியெல்லாம் செய்கிறார்கள்’’ என்று குற்றச்சாட்டிற்கு பதில் சொல்கிறார்.

இந்த சம்பவத்தின் முழு வீடியோவையும் யாரும் வெளியிடவில்லை. என்னை வீடியோ எடுக்கும்போது, ​​அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம் நான் பிரபலமான நபர், என்னை வீடியோ எடுத்து என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை.  அந்த நேரத்தில் எனக்கு காவல்துறையிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை’’ என்றார்.

இதற்கிடையில், விபத்து நடந்த போது பதிவு செய்யப்பட்ட மற்றொரு வீடியோ இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4