கதிர்காமத்திலிருந்து கொழும்பு வரை காலி வீதியில் இயங்கும் அரை சொகுசு பேருந்துகள் நிறுத்தப்படும்-அமைச்சர் பந்துல

#SriLanka #Bus #Colombo
Prasu
3 years ago
கதிர்காமத்திலிருந்து கொழும்பு வரை காலி வீதியில் இயங்கும் அரை சொகுசு பேருந்துகள் நிறுத்தப்படும்-அமைச்சர் பந்துல

கதிர்காமத்திலிருந்து கொழும்பு வரை காலி வீதியில் இயங்கும் அரை சொகுசு பேருந்துகள் நிறுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடக அமைச்சில் இன்று (ஜனவரி 4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பஸ்கள் இன்று (ஜனவரி 4) நள்ளிரவு முதல் இயக்கத்தில் இருந்து நீக்கப்படும் என  அமைச்சர்  தெரிவித்தார்.

அதன்படி, அந்த வழித்தடத்தில் வழக்கமான பேருந்துகள் மற்றும் சொகுசு பேருந்துகள் வழமையாக இயங்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நள்ளிரவு முதல், அரை சொகுசு பேருந்துகள் இல்லாததால், பயணிகள் கட்டணம் ரூ.1,541ல் இருந்து ரூ.1,117 ஆக குறைக்கப்படுகிறது.

இதன் மூலம் 1,541 செலுத்தி கதிர்காமத்திலிருந்து கொழும்புக்கு வந்த பயணிகள் அதே பேருந்தில் 1,117 செலுத்தி பயணிக்கலாம்.

கதிர்காமத்தில் இருந்து கொழும்புக்கு 28 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4