இலவங்கம் அல்லது கராம்பு கொண்டு என்றும் இளமையாக தோற்றமளியுங்கள்.

#ஆரோக்கியம் #மூலிகை #பயன்பாடு #தகவல் #Health #herbs #Benefits
இலவங்கம் அல்லது கராம்பு கொண்டு என்றும் இளமையாக தோற்றமளியுங்கள்.

மனதை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொண்டால், நாம் எத்தனை வயதை கடந்தாலும் இளமை நம்முடனே இருக்கும்.எனக்கு எப்போதுமே வயது 16 என்று மனதில் நினைத்துக் கொண்டால், எப்போதுமே இளமையாக சந்தோஷமாக இருக்கலாம்.

ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். காய்கறிகளை நிறைய சாப்பிட வேண்டும். இதோடு சேர்த்து பின் சொல்லக்கூடிய அழகு குறிப்பு பின்பற்றும் போது நீங்கள் என்றைக்குமே ஸ்வீட் 16 தான்.

இளமையான தோற்றத்தை தக்க வைக்கும் இலவங்கம்:

லவங்கம் 10 எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு சின்ன உரலில் போட்டு ஒன்றும் இரண்டுமாக நுணுக்கி கொள்ள வேண்டும். அதாவது கொரகொரப்பாக நசுக்கி அந்த பொடியை தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, நசுக்கி வைத்திருக்கும் இந்த கிராம்பு தூளை அந்த தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

வடிகட்டி இந்த தண்ணீரை பிரிட்ஜில் ஸ்டோர் செய்தால் ஒரு வாரம் கெட்டுப்போகாது. தினமும் இந்த தண்ணீரை உங்களுடைய முகத்திலும் கழுத்திலும் ஸ்பிரே செய்து அப்படியே லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.

தினமும் இதை செய்யலாம். பத்து நிமிடம் மசாஜ் செய்துவிட்டு, முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி விடுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் தோல் சுருக்கம் வராது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4