அதிவேக நெடுஞ்சாலைகளில் அறவிடப்படும் புதிய பேருந்து கட்டணங்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு

#SriLanka #Bus #Colombo
Nila
3 years ago
அதிவேக நெடுஞ்சாலைகளில்  அறவிடப்படும் புதிய பேருந்து கட்டணங்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளிடம் அறவிடப்படும் பேருந்து கட்டணத்தை நேற்று (04) நள்ளிரவு முதல் 10 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, மாகும்புர - காலி இடையிலான புதிய பேருந்து கட்டணம் 930 ரூபாவாகவும், மாகும்புர - மாத்தறைக்கு இடையிலான புதிய பேருந்து கட்டணம் 1170 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடுவலை - மாத்தறைக்கு இடையிலான புதிய சொகுசு பேருந்து கட்டணம் 1260 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பு - கதிர்காமம் இடையிலான புதிய பேருந்து கட்டணம் 2270 ரூபா என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு - மாத்தறை அதிவேக நெடுஞ்சாலையில் புதிய பேருநது கட்டணம் 1300 ரூபாவாகும்.

அதுமாத்திரமன்றி கொழும்பு - கதிர்காமம் காலி வீதியில் சேவையாற்றும் அரை சொகுசு பேருந்து சேவை நேற்று நள்ளிரவு முதல் நீக்கப்பட்டு, சாதாரண பேருந்து சேவையாக மாற்றப்பட்டது.

அதன்படி, அந்த வழித்தடத்தில் செல்லும் அரை சொகுசு பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4