பிரபல அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளரால் நடத்திச்செல்லப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை

Kanimoli
3 years ago
பிரபல அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளரால் நடத்திச்செல்லப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை

  கண்டி, தங்கொல்ல உரவல பிரதேசத்தில் பிரபல அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளரால் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திச்செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டது.

இதன்போது, இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் தம்புத்தேகம மற்றும் மாத்தளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவித்த பொலிஸார், அவர்கள் 35 மற்றும் 38 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கண்டியில் பிரபல அரசியல்வாதி ஒருவரின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் குறித்த நபர், கண்டி பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் வெளி இடங்களிலும் இவ்வாறான பல விபச்சார நிலையங்களை இயக்கி வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4