சோரியாரிசிஸ் மற்றும் ஏனைய அரிப்புகளுக்குரிய இயற்கை வைத்திய முறைகள்.

#ஆரோக்கியம் #மூலிகை #பயன்பாடு #சோரியாசிஸ் #தகவல் #Health #herbs #Benefits
சோரியாரிசிஸ் மற்றும் ஏனைய அரிப்புகளுக்குரிய இயற்கை  வைத்திய முறைகள்.

நாம் தினமும் குளித்தல் அவசியம். சிலர் ஒன்று விட்டு மறு நாள் என குளிப்பார்கள். இந்த குளியலின் போது உங்களுக்கு அரிப்பு, படை, அலர்ஜி வியாதிங்க இருந்தால் பின்வரும் முறையில் இயற்கை வைத்தியம் செய்து குணமாக்கலாம். அல்லது உடம்பில் தடிச்ச தோற்றத்துடன் பார்க்க மற்றவர்களுக்கும் அரிப்புது போலிருக்கும்.

தவசுமுருங்கை இலை

ஒரு கைபிடி எடுத்து இடித்து அதுல கிடைக்கற சாறை குடிச்சா… அரிப்பு, படை எல்லாம் குணமாயிரும். மேலே சொன்ன மருந்தை சாப்பிடுற காலத்துல புளி இல்லாத பத்தியம் இருக்கணும்கிறது முக்கியம்.

அருகம்புல்

ஒரு கைபிடி அருகம்புல் ஒரு கைப்பிடி, மஞ்சள் கிழங்கு ஒரு இணுக்கு எடுத்து மையா அரைக்கணும். அதை தோல் வியாதி இருக்குற இடத்துல பூசி, அரை மணி நேரம் கழிச்சு குளிக்கணும். வாரத்துல மூணு நாள், நாலு நாள்னு நம்ம வசதிக்கு ஏத்தாப்புல இப்படி குளிச்சுட்டு வந்தா… நல்ல குணம் தெரியும். 

குப்பைமேனி

ஒரு கைப்பிடி, மஞ்சள் கிழங்கு ஒரு இணுக்கு, கல் உப்பு கொஞ்சம் சேர்த்து அரைச்சு, அரிப்பு கண்ட இடத்துல பூசி, அரை மணி நேரம் கழிச்சு குளியல் போடணும். இதைத் தொடர்ந்து செய்துகிட்டு வந்தா… ஊறல், படை எல்லாம் ஓடிப்போயிரும்

வேப்பிலை

ஒரு கைப்பிடி எடுத்துக்கோங்க, அதோட மூணு சின்ன வெங்காயம் சேர்த்து அரைச்சி உடம்பு முழுசும் பூசி, அரை மணி நேரம் கழிச்சி வெந்நீர்ல குளிச்சாலும், தோல் சம்பந்தபட்ட வியாதிக்கு குணம் கிடைக்கும்.

நன்னாரி வேர்

 நன்னாரி வேர் (நாட்டு மருந்து கடையில் கிடைக் கும்) 20 கிராம் எடுத்து, அரை லிட்டர் தண்ணி சேர்த்து நல்லா காய்ச்சணும். 200 மில்லி ஆனதும் இறக்கிறணும். காலையில நூறு மில்லி, சாயங்காலம் நூறு மில்லினு குடிச்சு வந்தா… தோல் நோய், வந்த இடம் தெரியாம ஓடிப்போயிரும்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!