சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 600 மெற்றிக் தொன் பிரவுன் சீனியை கைப்பற்றிய சுங்க அதிகாரிகள்

#sugar #India
Prathees
3 years ago
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 600 மெற்றிக் தொன் பிரவுன் சீனியை கைப்பற்றிய சுங்க அதிகாரிகள்

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 600 மெற்றிக் தொன் பிரவுன் சீனி கையிருப்பு சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பிரவுன் சீனியை இந்த நாட்டிற்கு இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளதுடன், வெள்ளை சீனி என்ற பெயரில் இந்த சீனி கையிருப்பு இறக்குமதி செய்யப்பட்டது.

வர்த்தகர் ஒருவர் 1200 மெற்றிக் தொன் சீனியை கொண்டு வந்ததாகவும் அதில் 600 மெற்றிக் தொன் பிரவுன் சீனி கையிருப்பு இருப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த பிரவுன் சீனி கையிருப்பின் பெறுமதி சுமார் 241 மில்லியன் ரூபா எனவும், சீனி கையிருப்பு பறிமுதல் செய்யப்பட உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4