சுவிட்சர்லாந்தில் வாழ்க்கையை கொண்டு செல்வது மிகவும் கடினம்: ஆய்வில் தகவல்
சுவிட்சர்லாந்தில் வாழ்க்கையை கொண்டு செல்வது மிகவும் கடினம் என்கிறார்கள் அங்கு வாழும் வெளிநாட்டவர்கள்.
அங்குள்ள சில விடயங்கள் வாழ்க்கையைக் கடினமாக்குவதாக தெரிவித்துள்ளார் அங்கு வாழும் வெளிநாட்டவர்கள் சிலர்.
The InterNations என்னும் ஆய்வமைப்பு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், சுவிட்சர்லாந்தில் வாழும் பல்வேறு நாட்டவர்களிடம் சுவிட்சர்லாந்து வாழ்க்கை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட வெளிநாட்டவர்களில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், சுவிட்சர்லாந்தில் வீடு கிடைப்பது கஷ்டம் என்றும், சுமார் 60 சதவிகிதம் பேர் வீட்டு வாடகை கொடுப்பது கடினம் என்று தெரிவித்துள்ளார்கள்.
பிரான்ஸ் நாட்டவரான ஒருவர், சுவிட்சர்லாந்தில் வீடு வாங்குவது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லை என்றும், வாடகையோ மிகவும் அதிகம் என்றும் கூறியுள்ளார். Mercer என்னும் ஆய்வமைப்பு மேற்கொண்ட ஆய்வில், உலகின் விலைவாசி அதிகமான நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று என தெரியவந்துள்ளது.
சுமார் 60 சதவிகிதம்பேர், சுவிட்சர்லாந்தில் வீடு வாங்குவதற்கு பதிலாக, வாடகைக்கு இருப்பதாக InterNations அமைப்பு தெரிவிக்கிறது.
வெளிநாட்டவர்கள் பலர் வாழ விரும்பும் கனவு நாடாக விளங்குகிறது சுவிட்சர்லாந்து விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.