பிரொய்லர் கோழி உணவல்ல..விஷம், அதனைச் சாப்பிட்டால் வரும் கேடு...
கோழியிறைச்சி என்றால் போதுமே நல்லதொரு பிடிபிடிக்கலாம் என்று உண்பீர்கள். ஆனால் அந்த கோழியிறைச்சி பிரோயிலராக இருந்தால் உடலுக்கு ஆரோக்கியமா என்பதை சற்று யோசிக்கத்தவறிவிடுபவர்கள் அதிகம்.
“பிராய்லர் கோழிகள் 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்துவிடுகிறது. கோழிகளை வளர்ப்பதற்கு 12 விதமான கெமிக்கல்ஸ் அதற்கு கொடுக்கப்படும் உணவோடு கலந்து கொடுக்கப்படுகிறது.
கோழிகளுக்கு நோய்கள் வரக்கூடாது என்பதற்காக அதிகளவு ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது.இதனால் கோழிகளுக்கு வரும் நோயை குணப்படுத்த முடியாமல் போவதோடு, அந்த இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சி.எஸ்.இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கோழிகள் அதிக சதையோடு வளர்வதற்கு பல்வேறு விதமான மருந்துகளை ஊசிகளின் மூலம் கோழிகளு க்கு செலுத்துகிறார்கள். அதனால் அதை உண்ணும் ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்கள் அழிக்கப் படுகிறது. பெண்குழந்தைகள் பத்து பதினோரு வயதிலேயே பருவமடைந்துவிடுகிறார்கள்.
பிராய்லர் கோழியின் சதையில் கெட்ட கொழுப்பு அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும் போது நம் உடலில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது, நமது கல்லீரலில் வீக்கத்தையும் ரத்த அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. 100ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது.
பிராய்லர் கோழியை சாப்பிடுவதால் சிறுநீரகங்ளிலும் கல்லீரலிலும் கேன்சர் நோய் மற்றும் குடல் புற்று நோயும் உருவாகிறதாம். இது தவிர மஞ்சள் காமாலை, இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதி களின் எண்ணிக்கையை அடுக்கலாம்.”
“பிராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட காரணத் தால் நாமக்கல் பகுதி மக்களுக்கு புற்று நோய் பிரச்னை அதிகமாக பரவி வருகிறது. பிராய்லர் என்பது மக் களின் ஊட்டச்சத்து சார்ந்ததாக இல்லை. வணிக நோக்கம் கொண்டதாகவே இருக்கிறது. பிராய்லர் கோழிகளால் இது மாதிரியான பிரச்னைகள் கட்டாயம் மனிதர்களுக்கு ஏற்படுகிறது”
“இந்த நிலைமையை தவிர்க்க, கோழி வளர்ப்பை வெளிப்படையாக்க வேண்டும். இரண்டாவதாக ஒவ்வொரு கோழியையும் பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும். பிராய்லருக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் போல நாட்டுக்கோழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கலாம்”