இருத்தலுக்காக நீ
Kanimoli
2 years ago

நடித்து வாழும்
நிலையும் வேண்டாம்.
இல்லை என்றால்
தேடிட முயற்சிப்போம்.
போதாது என்று நாம்
சோர்ந்து போகலாமா?
ஒரு தடவை நாம்
முயன்றால் என்ன?
அளவாக நுகர்ந்து
அழகாக வாழ்ந்தால்.
அமைதியாக வாழ்வு
மெல்ல நகரும் பாரேன்.
இல்லாமையை நீ
ஒத்துக் கொண்டால்
இருத்தலுக்காக நீ
முயன்றிட முயல்வாய்.
மற்றவர் ஆடம்பரம்
உன்னை ஆட்டுவிக்கும்.
புரிந்து போனால் பாரேன்
நிம்மதி வந்து வாழும்.
......... அன்புடன் நதுநசி



