முன்னாள் ஜனாதிபதியின் தலைமை அதிகாரிக்கு உச்ச நீதிமன்றத்தால் தண்டனை உறுதி!

#SriLanka #Court Order #Arrest #Maithripala Sirisena
Mayoorikka
1 year ago
முன்னாள் ஜனாதிபதியின் தலைமை அதிகாரிக்கு  உச்ச நீதிமன்றத்தால் தண்டனை உறுதி!

இலஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிக்குழு உயர்  அதிகாரி குசும்தாச மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்க ஆகியோருக்கு தணடனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

2018 மே மாதம், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, பிரதிவாதிகளான குசும்தாச மஹாநாம மற்றும் பியதாச திஸாநாயக்க ஆகியோருக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வழக்குத் தாக்கல் செய்தது.

அந்தக் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக் காணப்பட்ட குசும்தாச மஹாநாமவுக்கு 20 வருட கடூழியச் சிறைத்தண்டனையும், 65,000 ரூபா அபராதமும் விதித்து மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.

அத்துடன், குற்றம் சாட்டப்பட்ட பியதாச திஸாநாயக்கவுக்கு 12 வருட கடூழியச் சிறைத்தண்டனையும், 50,000 ரூபா அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது

கடந்த 2018 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் 20மில்லியன் ரூபா இலஞ்ச பணத்தினைப் பெற்றுக் கொண்டிருந்த வேளை இலஞ்ச விசாரனைப் பிரிவினர்களினால் இருவரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!