இன்றைய வேதவசனம் 13.01.2023: மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக...

#Bible
Prathees
1 year ago
இன்றைய வேதவசனம் 13.01.2023: மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக...

தத்துவஞானியும் எழுத்தாளருமான ஹேன்னா அரெண்ட் (1906-75), “சரித்திரத்தில் மனிதர்கள் மிகவும் பலம்வாய்ந்த பேரரசர்களையும் எதிர்த்து அவர்கள் முன்பு தலைவணங்க மறுத்திருக்கின்றனர்” என்று குறிப்பிடுகிறார்.

மேலும், “அதில் சிலர் மக்கள் கூட்டத்தை எதிர்க்கவும், கலகக்கார கூட்டத்திற்கு முன் துணிச்சலாய் நிற்கவும், ஆயுதமில்லாமல் அவர்களின் வெறித்தனமான செய்கைகளை மேற்கொள்ளவும் துணிந்திருக்கின்றனர்” என்று சொல்லுகிறார்.

அரெண்ட் ஒரு யூத பெண்மணியாக, அவளுடைய சொந்த தேசமான ஜெர்மனியில் இதை நேரில்  பார்த்திருக்கிறார். மக்களால் புறக்கணிக்கப்படுவது என்பது பயங்கரமான ஒரு காரியம். 

பவுல் அப்போஸ்தலரும் அதுபோன்ற ஒரு புறக்கணிப்பை அனுபவித்திருக்கிறார். பரிசேயனாகவும் யூத போதகராகவும் பயிற்சிபெற்ற அவர், உயிர்த்தெழுந்த இயேசுவை சாட்சியிட்டபோது, அவருடைய வாழ்க்கை தலைகீழாய் மாறியது.

கிறிஸ்தவர்களை துன்பப்படுத்தும்பொருட்டு தமஸ்குவுக்கு பவுல் கடந்து போகிறார் (அப்போஸ்தலர் 9). அவருடைய மனந்திரும்புதலுக்கு பின்னர், அவர் தம்முடைய சொந்த ஜனத்தினால் புறக்கணிக்கப்பட்டார்.

அவர்களால் அவருக்கு நேரிட்ட துன்பங்களை பவுல் தம்முடைய 2 கொரிந்தியர் நிருபத்தில் குறிப்பிட்டுள்ளார். அவற்றில், “அடிகள்” மற்றும் “காவல்கள்” ஆகியவை உள்ளடங்கும் (6:5).  
அந்த புறக்கணிப்பை கோபத்துடனும் கசப்புடனும் கையாளுவதற்கு பதிலாக, அவர்கள் தேவனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பவுல் விரும்பினார்.

அவர் எழுதும்போது, “எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது… மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே” (ரோமர் 9:1-3) என்று சொல்லுகிறார். 
தேவன் நம்மை அவருடைய குடும்பத்தில் வரவேற்கும்போது, நம்முடைய சத்துருக்களையும் அவருடைய குடும்பத்தில் சேர்த்துக்கொள்ளட்டும்.