IMF காலதாமதத்தால் பல பிரச்சனைகள் - உண்மைகளை உலகுக்கு கூறும் இலங்கை

#IMF #SriLanka
Prathees
1 year ago
IMF காலதாமதத்தால் பல பிரச்சனைகள் - உண்மைகளை உலகுக்கு கூறும் இலங்கை

இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் பலதரப்பு கடன் வழங்கும் நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க தலையீடு அவசியம் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

"உலகளாவிய தெற்கின் குரல்" G20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

அங்கு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இராஜாங்க அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

ஊழியர் மட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் மூலம் தற்போது நடைபெற்று வரும் சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் விரைவாக ஒப்பந்தங்களை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டதால், IMF நிர்வாகக் குழுவின் ஒப்புதல் மற்றும் நிதி வழங்கல் ஆகியவை தாமதமாகியுள்ளன.

இது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும், இவ்வாறான தொழிநுட்பச் சிக்கல்களாலும், பெறுபேறுகளில் ஏற்படும் தாமதங்களாலும், நாட்டின் வாழ்வாதாரத்துக்கு பாரிய பாதிப்புகள் ஏற்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இந்த மாநாட்டில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

பரஸ்பர புரிந்துணர்வின் ஊடாக இந்த செயற்பாட்டின் இறுதிக்கட்ட நடவடிக்கை விரைவில் இடம்பெறும் என இலங்கை எதிர்பார்ப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!