பிட்ச் தரப்படுத்தல் நிறுவனம் தனது தேசிய நீண்ட கால மதிப்பீடுகளை தரமிறக்கியுள்ளது

Kanimoli
3 years ago
பிட்ச் தரப்படுத்தல் நிறுவனம் தனது தேசிய நீண்ட கால மதிப்பீடுகளை தரமிறக்கியுள்ளது

பிட்ச் தரப்படுத்தல் நிறுவனம்;, இலங்கையின் 10 வங்கிகள், இலங்கை மின்சார சபை, ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் இலங்கையை தளமாகக் கொண்ட லக்தனவி லிமிடெட் ஆகியவற்றின் தேசிய நீண்ட கால மதிப்பீடுகளை தரமிறக்கியுள்ளது.
பிட்ச் தரமதிப்பீட்டு நிறுவனத்தின் அண்மைக்கால இறையாண்மை குறைப்பு மற்றும் மறுசீரமைப்பைத் தொடர்ந்தே இலங்கையின் 10 வங்கிகளது தேசிய நீண்ட கால மதிப்பீடுகளை பிட்ச் தரமிறக்கியுள்ளது.
இதன்படி இலங்கை வங்கி, மக்கள் வங்கி,கொமர்சல் வங்கி என்பன ஏ தரத்தில் இருந்து ஏஏ மறை தரத்துக்கு தரமிறக்கப்பட்டுள்ளன.
ஹட்டன் நெசனல் வங்கி, சம்பத் வங்கி என்பன ஏ தரத்தில் இருந்து ஏஏ மறை தரத்துக்கு தரமிறக்கப்பட்டுள்ளன.
கார்கில்ஸ் வங்கி மற்றும் டிஎப்சிசி என்பன ஏ பிளஸ் தரத்தில் இருந்து ஏ தரத்துக்கு தரமிறக்கப்பட்டுள்ளன.
என்எஸ்பி வங்கி,; செலான் வங்கி, நேசன் ட்ரஸ்ட் வங்கி என்பவற்றின் மதிப்பீடுகள் ஏ தரத்தில் இருந்து ஏ மறை தரத்துக்கும்  தரமிறக்கப்பட்டுள்ளன.
இலங்கை மின்சார சபையின் தேசிய மதிப்பீட்டை ஏஏ மறை தரத்தில் இருந்து பி தரத்துக்கும், ஸ்ரீலங்கா டெலிகொம்மின் தேசிய மதிப்பீட்டை ஏஏ மறையில் இருந்து ஏ தரத்துக்கும், பிட்ச் தரமிறக்கியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4