இலங்கைக்கு மேலும் சலுகை வழங்கிய பங்களாதேஷ்!
Mayoorikka
2 years ago

இலங்கையின் நீண்டகால பொருளாதார நெருக்கடியின் காரணமாக பங்களாதேஷ் கடனை திருப்பி செலுத்தும் காலத்தை நீடித்துள்ளது.
இந்நிலையில் பங்களாதேஷ் மத்திய வங்கியானது 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைத் திருப்பிச் செலுத்த இலங்கைக்கு மேலும் ஆறு மாத கால அவகாசம் வழங்கியதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அதன் நீண்டகால பொருளாதார நெருக்கடி காரணமாக திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிக்க கோரியதை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக – பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



