ஐந்து தமிழ் கட்சிகள் புதிய கூட்டணி: யாழ்ப்பாணத்தில் இன்று முக்கிய முடிவு

#SriLanka #Jaffna #Tamil People #TNA #Election
Mayoorikka
2 years ago
ஐந்து தமிழ் கட்சிகள் புதிய கூட்டணி: யாழ்ப்பாணத்தில்  இன்று முக்கிய முடிவு

யாழ்ப்பாணத்தில் ஐந்து தமிழ் கட்சிகள் புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் இன்று தீர்க்கமான பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுக்கவுள்ளன.

குறித்த பேச்சுவார்த்தையில், விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, சித்தார்த்தன் தலைமையிலான புளொட், சுரேஷ் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப், சிறிகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர் 

இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனியாக போட்டியிட தீர்மானித்துள்ள நிலையில், இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நேற்று  சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!