யாழ்ப்பாணத்தில் அரச பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து!

#SriLanka #Jaffna #Accident #Bus
Mayoorikka
2 years ago
யாழ்ப்பாணத்தில் அரச பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து  விபத்து!

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரச பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
 
இன்று காலை சிறுப்பிட்டி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. 

 குறித்த பேருந்து சிறுப்பிட்டி பகுதியில் உள்ள வாகனம் திருத்தும் நிலையத்துக்குள் சென்று மோதி விபத்துக்குள்ளாக்கி உள்ளது.

இதனால் வாகனத்தின் முன்பக்கம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியது. இதில்  யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான விரிவான விசாரணைகளை அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!