இல்லத்தில் 650 கஞ்சா செடிகள் வைத்திருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உடனடி பணிநீக்கம்

Prasu
2 years ago
இல்லத்தில் 650 கஞ்சா செடிகள் வைத்திருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உடனடி பணிநீக்கம்

மொனராகலை பிரிவுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார ஹேரத் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு பொலிஸ்மா அதிபர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

அதனடிப்படையில் மொனராகலை பிரிவுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார ஹேரத்தை கடந்த 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து சுமார் 650 கஞ்சா செடிகள் கண்aடுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!