உள்ளூராட்சி தேர்தல் குறித்து உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

#SriLanka #Election #Court Order
Mayoorikka
1 year ago
உள்ளூராட்சி  தேர்தல் குறித்து உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஓய்வுபெற்ற இராணுவ கர்னல் டபிள்யூ. எம். ஆர்.விஜேசுந்தரவினால் முன்வைக்கப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, ​​தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இந்த அறிவித்தலை வழங்கினார்.

இந்த மனு இன்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, எஸ்.துரைராஜா மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த அடிப்படை உரிமை மனு தொடர்பில் திருத்தப்பட்ட மனுவை முன்வைக்க மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அனுமதி கோரினார். அதன்படி, திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், மனுவை பரிசீலிக்க வரும் 18ம் தேதி விசாரணைக்கு எடுக்க உத்தரவிட்டது.

தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஆஜராகப் போவதில்லை என சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் சார்பில் ஆஜராகுமாறு ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த மனு அழைக்கப்பட்ட போது, ​​சட்டத்தரணிகளான சுனில் வதகல, எரங்க குணசேகர, பாஃபரல் அமைப்பு உள்ளிட்ட பல தரப்பு சார்பில் சட்டத்தரணிகளும் ஆஜராகி, அதனை நிராகரிக்குமாறு கோரி இடைக்கால மனுக்களை தாக்கல் செய்தனர்.

நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலவுவதால், இந்த நேரத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது பொருத்தமற்றது என மனுதாரர் தெரிவித்துள்ளார்.

எனவே, தேர்தலை நடத்துவதை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் கோரியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!