உள்ளுராட்சி மன்றத் தேர்தல்:11 கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன

#Election #SriLanka
Prathees
3 years ago
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்:11 கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 11 அரசியல் கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் நேற்று (13) கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் நேற்று (13) காலை 08.30 மணி முதல் மாலை 04.30 மணி வரையில் பிணை வைப்புத் தொகையை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நுவரெலியா, கண்டி, பொலன்னறுவை, அம்பாறை, வவுனியா, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கான பிணைத் தொகையை தேசிய மக்கள் படை நேற்று வைப்பிலிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கான கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களுக்கான கட்டுப்பணத்தை ஜனநாயக ஐக்கிய முன்னணி நேற்றைய தினம் வைப்பிலிட்டுள்ளது.

கம்பஹா, ஹம்பாந்தோட்டை, பதுளை, அம்பாறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கான கட்டுப்பணத்தை தேசிய ஜனநாயக முன்னணி வைப்பிலிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மாத்தறை, ஹம்பாந்தோட்டை, பதுளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கான கட்டுப்பணத்தை சமகி ஜன பலவேகய நேற்று வைப்பிலிட்டுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி, ஸ்ரீலங்கா சோசலிசக் கட்சி, ஜனதா சேவகா கட்சி, சிங்கள ஆழ்கடல் தேசிய முன்னணி, புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிஸ்ட் கட்சி மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளும் நேற்று பல மாவட்டங்களுக்கு கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தவிர நேற்று 11 சுயேச்சைக் குழுக்களும் இவ்வருடம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தையும் வைப்பிலிட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4