குத்துவிளக்கில் யாழ்ப்பாணத்தில் உருவாகியது புதிய கூட்டணி: ஒப்பந்தம் கைச்சாத்து

#SriLanka #Jaffna #Election #TNA
Mayoorikka
3 years ago
குத்துவிளக்கில் யாழ்ப்பாணத்தில் உருவாகியது புதிய கூட்டணி: ஒப்பந்தம் கைச்சாத்து

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புதிய கட்சிகளை இணைத்துக்கொண்டு  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எனும் பெயரில் யாழில் புதிய கூட்டணிக்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது.

 எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக நேற்று யாழில் ஒன்றுகூடி முடிவு எடுக்கப்பட்டது. அதனடிப்படையில் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு பின்னர், கட்சிகளின் தலைவர்களால் புதிய கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

அந்தவகையில் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் இன்று மதியம்  கைச்சாத்திட்டுள்ளன.

அதன்படி எதிர்வரும் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எனும் பெயரில், குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தில் புளொட் சார்பாக த.சித்தார்த்தனும், ரெலோ சார்பாக செல்வம் அடைக்கலநாதனும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பாக சுரேஷ் பிரேமச்சந்திரனும் தமிழ் தேசிய கட்சி சார்பாக என்.ஸ்ரீகாந்தாவும் ஜனநாயக போராளிகள் கட்சி சார்பாக வேந்தனும் கையெழுத்திட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4