இன்றைய வேதவசனம் 15.01.2023: ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்

#Bible
Prathees
1 year ago
இன்றைய வேதவசனம் 15.01.2023: ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்

நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார். (#யோவான் 13:35)

ஆம்; தெய்வீக கிருபையாகிய பூங்காவில், மிக அழகாக பூத்துக் குலுங்கும் மலர்களிலே, மிகவும் இனிமையானது அன்பென்னும் மலர்தான்.

அன்புக்குக் கீழ்ப்படாதோர் யாருமில்லை. சத்துருவை சிநேகியுங்கள், உங்கள் அயலானிடம் அன்பு பாராட்டுங்கள் என்று கிறிஸ்து சொன்னதின் ஆழமான இரகசியம், அன்பு அனைவரையும் ஆதாயப்படுத்தும் என்பதாலேயே!

அன்பை சிலுவையிலே நம் ஆண்டவர் செயல்படுத்திக் காண்பித்தார். அவர் நொறுக்கப்பட்ட போதும், பிழியப்பட்ட போதும் கூட, உங்கள் மேல் வைத்த அன்பை அவர் விட்டுவிடவில்லை.
பவுல் அப்போஸ்தலன் சொல்கிறார்;

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். (#ரோமர் 5:8). எவ்வளவு உச்சிதமான அன்பு! தியானித்துப் பாருங்கள்.
அன்பு, உங்களை ஏவி எழுப்புகிறது. கிறிஸ்துவுக்கு அன்பான சீஷனாகிய யோவான் சொல்கிறார்;

அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். (#I_யோவான் 3:16).
தேவ ஆவியானவர் தாமே உங்கள் உள்ளங்களை தெய்வீக அன்பினால் நிரப்புவாராக!

ஆமென்.
ரோமர் 13:8

ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.