கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.111.55 மில்லியன் மதிப்புள்ள தங்கத்துடன் பெண் கைது

#Arrest #Airport
Prathees
1 year ago
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.111.55 மில்லியன் மதிப்புள்ள தங்கத்துடன் பெண் கைது

நாட்டிற்கு தங்கத்தை கடத்த முற்பட்ட 30 வயதுடைய இலங்கைப் பெண் சுங்க அதிகாரிகளால் இன்று அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக சுங்க பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.

இந்திய வருவாய் புலனாய்வு பிரிவின் ஆதரவுடன் சுங்க வருவாய் கண்காணிப்பு பிரிவில் இணைக்கப்பட்ட சுங்க புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து பெண் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

சுங்கப் புலனாய்வுத் தகவல்களின்படி, குறித்த பெண் துபாயிலிருந்து சென்னை வழியாக விமானம் மூலம் இன்று அதிகாலை 1.45 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

குறித்த பெண்ணின் உடமைகளை முழுமையாக சோதனை செய்த போது, பயணப் பைகளுக்குள் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கடத்தப்பட்ட தங்கத்தில் 24 கரட் தங்கக் கட்டிகளின் 24, மோதிரங்கள் மற்றும் வளையல்கள் மற்றும் திரவத் தங்கம்  ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன என்று சுதத்த சில்வா கூறினார்.

இந்த தங்க நகைகள் வெள்ளி முலாம் பூசப்பட்டதாகவும், சுங்க அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க வங்கி அட்டைகள் போன்று வடிவமைக்கப்பட்டதாகவும் காணப்படுவதாக  அவர் தெரிவித்தார்.

இந்த தங்கத்தின் மொத்த எடை 4 கிலோ 892 கிராம் மற்றும் அவற்றின் சந்தை மதிப்பு ரூ.111.55 மில்லியன் (ரூ.111,550,000) என மதிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!