13வது திருத்தச் சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளது - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

Kanimoli
3 years ago
13வது திருத்தச் சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளது - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

13வது திருத்தச் சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்..

13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பிரச்சினை வடக்கு மக்களுக்கான பிரச்சினை மாத்திரமல்ல, இலங்கையில் உள்ள அனைவரும் கோருகின்றார்கள் இதை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் 

அதற்காக கட்சித் தலைவர்களை சந்திப்பதற்கு விரும்புகின்றேன். கட்டங்கட்டமாக அந்த 13ஆவது திருத்தச் சட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

அதற்காக அதை உடனடியாக முழுமையாக நடைமுறைப்படுத்தி விட முடியாது. குறிப்பாக தமிழ், முஸ்லிம், மலையக மக்களுக்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு நான் முயற்சிக்கின்றேன்.

அதேபோல காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில் உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும். அதற்குரிய வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4