மின்சாரக் கட்டணம் அதிகம்: மீற்றர் வாசிப்பாளரைத் தாக்கிய நபர்! மின்சாரத்தை துண்டித்த அதிகாரிகள்

#Electricity Bill #Arrest
Prathees
3 years ago
மின்சாரக் கட்டணம் அதிகம்: மீற்றர் வாசிப்பாளரைத் தாக்கிய நபர்! மின்சாரத்தை துண்டித்த அதிகாரிகள்

மஹகும்புக்கடை கல்குலிய விகாரைக்கு அருகாமையில் உள்ள வீடுகளின் மின்கட்டணம் அதிகரித்துள்ளதாகக் கூறி மின்கட்டணத்தை வழங்கிக்கொண்டிருந்த  மீற்றர் வாசிப்பாளர் ஒருவரை  தடிகளால் கொடூரமாக தாக்கிய நபர் ஒருவர் மஹகும்புக்கடவல பொலிஸாரால் நேற்று (15ஆம் திகதி) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹலவத்த மின் பொறியியல் காரியாலயத்தில் கடமையாற்றும் சம்பத் நெரஞ்சனா என்ற மின்சாரக் கட்டணம் வழங்குபவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (14ம் திகதி) பிற்பகல் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன், அப்போது தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் கட்டணத்தை  வழங்கிக் கொண்டிருந்தார்.

கடந்த மாதங்களை விட இம்முறை மின்கட்டணம் அதிகரித்துள்ளதாக மீற்றர் வாசிப்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலின் பின்னர், சந்தேக நபர் பாதிக்கப்பட்ட நபரை அந்த இடத்தை விட்டு வெளியேற விடாமல் வீதியை மறித்துள்ளார்.

கல்குலிய பிரதேசத்தில் மரத்தாலான கொட்டகையை நடத்தும் நபர் ஒருவரே தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீற்றர் வாசிப்பாளரை தாக்கிய சந்தேக நபர் அவரை பயணிக்க அனுமதிக்காததால் ஹலவத்தை மின்சார அதிகாரசபை அலுவலக அதிகாரிகள் மஹகும்புக்கடவல பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிசார் தலையிட்டு மீற்றர் வாசிப்பாளரை வைத்தியசாலையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தனர்.

இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தாக்குதல் நடத்தப்பட்ட மொஹோரியா உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சார சபை அதிகாரிகள் மின்சாரத்தையும் துண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதுடைய சந்தேகநபர் ஆனமடுவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மஹகும்புக்கடவல பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி இன்ஸ்பெக்டர் மாய ரஞ்சன் உள்ளிட்ட அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4