இரண்டு இளைஞர்களை படுகொலை செய்து புதைத்த சம்பவம்: இருவர் கைது

#SriLanka #Arrest #Police #Crime #Cricket
Mayoorikka
3 years ago
இரண்டு இளைஞர்களை படுகொலை செய்து புதைத்த சம்பவம்: இருவர் கைது

மாவனெல்லயில் இரண்டு  இளைஞர்களை  படுகொலை செய்து புதைத்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கேகாலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

29 மற்றும் 30 வயதுடைய சந்தேகநபர்கள் இன்று கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மாவனெல்ல கிரிங்கதெனிய மற்றும் கெரமினிய பிரதேசங்களில் வசிக்கும் 26 மற்றும் 28 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கடந்த வருடம் நவம்பர் 18 மற்றும் 25 ஆம் திகதிகளில் இருந்து காணாமல் போயுள்ளனர்.


பின்னர், காணாமல் போனவர்களுடையது என சந்தேகிக்கப்படும் இரண்டு சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

போதைப்பொருள் விற்பனை காரணமாக இவர்கள் அடித்துக் கொல்லப்பட்டு ரம்புக்கனை, ஹுரிமலுவ பகுதியில் உள்ள வீடொன்றின் பின்பகுதியில் புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன ஆண்களின் பெற்றோர் டிசம்பர் 7, 2022 இல் பொலிஸார் புகார் அளித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் பொலிஸாருக்கு தகவல் கொடுப்பவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர்.


கொலை செய்யப்பட்ட இளைஞர் ஒருவரின் மோட்டார் சைக்கிளும் சந்தேகநபர்களில் ஒருவரது வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4