பிரித்தானியாவில் விளையாட்டு மைதானத்தில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்!

#world_news #Britain #football #Death #Men
Nila
1 year ago
பிரித்தானியாவில் விளையாட்டு மைதானத்தில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்!

பிரிட்டனில் பிரபலமான கால்பந்து அணியின் விளையாட்டு மைதானத்தில் ஆணின் சடலம் ஒன்று காண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 75 வயது மதிக்கத்தக்க நபரின் சடலமானது ஷ்ரோப்ஷயர் பகுதியில் அமைந்துள்ள Wesh Premier League Club அணியின் மைதானத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஞாயிறன்று விடிகாலையில் ஊழியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மைதானத்தில் திரும்பிய நிலையிலேயே ஆணின் சடலம் ஒன்றை கண்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் நிர்வாகத்தினருக்கு தகவல் அளிக்கவும் பின்னர் பொலிஸாருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

அணியின் முதன்மை நிர்வாகிகளில் ஒருவரான மாட் லீ தெரிவிக்கையில், நடந்த சம்பவத்தை முறையாக ஊழியர்கள் அணுகியுள்ளது பாரட்டத்தக்கது என்றார். உண்மையில் அந்த சம்பவம் அவர்களை பாதித்திருந்தது என்பதுடன், இது ஒரு துயரமான சம்பவம் என்றார்.மேலும், இறந்த நபருக்கு 60 முதல் 80 வயதிருக்கும் எனவும், அவர் எப்படி இறந்தார் என்பது தொடர்பான தகவல்கள் விசாரணைக்கு பின்னர் வெளியாகும் என கூறப்படுகிறது.

உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கையில், அந்த நபர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் மரணமடைந்ததாகவும், அந்த வாகனமானது கால்பந்து மைதானத்தின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது எனவும் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!