வாரிசு படத்தால் தயாரிப்பாளர் தில் ராஜு மீது கோபத்தில் உள்ள விஜய்

Kanimoli
3 years ago
வாரிசு படத்தால் தயாரிப்பாளர் தில் ராஜு மீது கோபத்தில் உள்ள  விஜய்

தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு கூட்டணியில் உருவான வாரிசு படத்தில் நடித்திருந்தார்.இதனால் இப்படம் தெலுங்கு சாயலில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ஆனாலும் ஆந்திராவில் வாரிசு படம் நல்ல வசூலை ஈட்டி வருவதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜூ மீது விஜய்க்கு கோபம் உள்ளதாம். சாதாரணமாக பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் தான் எல்லா மொழிகளிலும் வெளியாகும். இதனால் வசூலை அள்ள முடியும். ஆனால் தமிழில் வாரிசு படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியான நிலையில் தெலுங்கில் இரண்டு நாட்கள் தள்ளி வெளியானது.

ஏனென்றால் அங்கு சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோரின் படங்கள் வெளியானதால் தில் ராஜு வாரிசு படத்தை தள்ளி வெளியிட்டார். ஏனென்றால் தெலுங்கு சினிமாவில் உள்ள நடிகர்கள் குடும்பம் போல் ஒற்றுமையாக இருப்பதால் வாரிசு படத்தால் பிரச்சனை வரக்கூடாது என்பதால் இவ்வாறு முடிவு எடுத்திருந்தார்.

ஆகையால் தில் ராஜூ மீது விஜய்க்கு கோபம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் வம்சி மற்றும் தில்ராஜு இருவரும் விஜய்யை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அப்போது கூட விஜய், தில் ராஜுவிடம் சம்பிரதாயத்திற்கு மட்டுமே பேசியதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தில் ராஜுவை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியது விஜய் தான். ஆனால் இப்போது சிவகார்த்திகேயன், தனுஷ் என அடுத்தடுத்த நடிகர்களின் படத்தை தில் ராஜு தயாரிக்க உள்ளாராம்.

இதற்கான அட்வான்ஸ் தொகையையும் தற்போது இவர் கொடுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே வாரிசு படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் விஜய் பற்றி உயர்வாக பேசுவதாக நினைத்து பல சர்ச்சைகளில் தில் ராஜ் சிக்கி இருந்தார். இப்போது தமிழ் நடிகர்கள் படங்களை தயாரிப்பதில் ஆர்வம் செலுத்தி வருவதால் பல பிரச்சனைகளை சந்திக்க உள்ளார் என்று கூறப்படுகிறது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4