மீண்டும் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களால் முடங்கிய கொழும்பு!

#SriLanka #Colombo #Road #government #taxes
Nila
3 years ago
மீண்டும் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களால் முடங்கிய கொழும்பு!

பல தொழிற்சங்கங்கள் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளன.

அரசாங்கத்தின் தன்னிச்சையான வரித் திருத்தம் மற்றும் நாட்டின் வைத்தியசாலைகளில் மருந்துப் பற்றாக்குறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமையில் பல தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டத்திலிருந்து காலி முகத்திடல் வீதி பொலிஸாரால் முற்றாக மூடப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நிதஹஸ் மாவத்தை வீதி பொலிஸாரால் முற்றாக மூடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4