இலங்கையில் பாடப்புத்தகங்கள் தொடர்பில் வெளியான தகவல்!

#SriLanka #government #Parliament #prices
Mayoorikka
3 years ago
இலங்கையில் பாடப்புத்தகங்கள் தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கையில் அசராசசசங்கத்தினால் இலவசமகாக பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படும் பாடபுத்தகங்கள் அச்சிடும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்காக விலை மனுக் கோரல் மூலம் தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கான முற்பணம் மற்றும் புத்தகங்கள் அச்சிடப்பட்டதன் பின்னர் வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் இதுவரையில் செலுத்தாததால், புத்தக அச்சடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரச அச்சக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலும், கொடுப்பனவுகளை உரிய முறையில் வழங்கத் தவறியதனால் அச்சு நிறுவனங்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் இந்த ஆண்டில் திட்டமிட்டவாறு பாடப் புத்தகங்களை விநியோகம் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

திட்டமிட்டபடி பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணியை மீண்டும் தொடங்க முன்பணம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4