புதையல் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட தொல்பொருட்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது!

#Arrest #Police
Prathees
3 years ago
புதையல் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட தொல்பொருட்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது!

புதையல் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களை வைத்திருந்த மூன்று சந்தேக நபர்களை பாணந்துறை மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கிடைத்த தகவலின் அடிப்படையில், களுத்துறை வடக்கில் உள்ள ஹோட்டல் வாகன தரிப்பிடத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே கைது இடம்பெற்றுள்ளது.

பல்வேறு வண்ண கற்கள் பதிக்கப்பட்ட சிறிய கலசம், 5 தங்க ஆபரணங்கள் மற்றும் ஸ்கேனர் ஆகியவற்றை  பொலிசார் கைப்பற்றி உள்ளனர்.

தொல்பொருள் மதிப்புடையதாக சந்தேகிக்கப்படும் பல்வேறு சின்னங்கள் மற்றும் எழுத்துக்களைக் கொண்ட 2 கருங்கல் போன்ற திடப் பொருள்கள் மற்றும்

சந்தேகநபர்களின் பாதுகாப்பில் 7 அங்குல நீளமும் 2 அங்குல அகலமும் கொண்ட பழங்கால எழுத்துக்கள் மற்றும் சின்னங்கள் கொண்ட கல்வெட்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

3 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய பொருட்கள் தயார் செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இந்த மோசடியில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர் உடல்நலக் காரணங்களுக்காக இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற இராணுவ வீரர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மற்றும் பாணந்துறை மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4