உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து பிரதிநிதிகளும் அழைப்பு

#Election #SriLanka #Sri Lanka President #Lanka4
Kanimoli
3 years ago
 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து பிரதிநிதிகளும் அழைப்பு

 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து பிரதிநிதிகளும்தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு கலந்துரையாடவுள்ளார்கள் 

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு விரிவாக அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிப்புக்கு பின்  அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணைக்குழு சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கையும் நேற்று (23) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி இந்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4