Google நிறுவனம் 12000 பேரை பணிநீக்கம் செய்யவுள்ளது. சுந்தர் பிச்சையின் அதிர்ச்சி மின்னஞ்சல்!

#technology #google #Employees
Google நிறுவனம் 12000 பேரை பணிநீக்கம் செய்யவுள்ளது. சுந்தர் பிச்சையின் அதிர்ச்சி மின்னஞ்சல்!

கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை தனது ஊழியர்கள் 12000 பேரை அல்லது அதன் மொத்த ஊழியர்களில் 6 சதவீதத்தினரை பதவி நீக்கம் செய்வதாக  மின்னஞ்சல் பணியாளர்களுக்கு அனுப்பியுள்ளார். இவர் இந்த பணிநீக்கங்கள் உலகளவில் மற்றும் முழு நிறுவனத்திலும், அதன் வேலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும், தலைமை நிர்வாக அதிகாரியாக இதற்கு முழு பொறுப்பேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதத்தில் பல்வேறு காரணங்களை மேற்கோள் காட்டி, தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், மிக மோசமாகச் செயல்படும் 6% ஊழியர்களை அடையாளம் காணுமாறு மேலாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையின் படி, கூகுள் தொழில்நுட்ப நிறுவனமானது, பணியாளர்கள் தங்கள் அடுத்த வாய்ப்பைத் தேடும்போது அவர்களுக்கு ஆதரவளிக்கும்.

அமெரிக்காவில் இருக்கும் ஊழியர்களுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், அதனால் நிறுவனமானது முழு அறிவிப்பு காலத்தில் இருந்து, குறைந்தபட்சம் 60 நாட்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும்.

எழுத்து மூலமான ஆல்பபெட்டின் அறிவிப்பானது ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அதே சமயத்தில் உள்ளூர் வேலைவாய்ப்பு சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் காரணமாக மற்ற நாடுகளில் இருக்கும் ஊழியர்களுக்கான பணிநீக்க செயல்முறை அதிக நேரம் எடுக்கும் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மாற்றத்திற்கான முடிவானது, ”எங்கள் வேலையின் வலிமை, எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் மதிப்பு மற்றும் AIல் எங்களின் ஆரம்ப முதலீடுகள் ஆகியவற்றால், எங்களுக்கு முன்னால் ஒரு மிகப்பெரிய வாய்ப்பும், எதிர்காலமும் இருப்பதாக நான் உணர்கிறேன்” என்று சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4