நடிகையிடம் அத்துமீறிய குற்றச்சாட்டு: இயக்குநர் ஷகீல் நூரானி அதிரடி கைது!
33 வயதான நடிகையிடம் அத்துமீறிய குற்றச்சாட்டின் பேரில், 73 வயதான பிரபல பொலிவூட் திரைப்பட இயக்குநர் ஷகீல் நூரானி கைது செய்யப்பட்டுள்ளார்.
வரவிருக்கும் புதிய திரைப்படம் குறித்து கலந்துரையாடுவதற்காக, மும்பை மால்வாணி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அந்த நடிகையை வரவழைத்த இயக்குநர் நூரானி, அவருக்குப் போதைப்பொருள் கொடுத்து அத்துமீறலில் ஈடுபட்டதுடன், மிரட்டலும் விடுத்ததாகக் காவல்துறையில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இயக்குநர், போரிவலி விடுமுறை கால நீதிமன்றத்தில் (Borivali Holiday Court) முன்னிலைப்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரை ஆகஸ்ட் 12-ஆம் திகதி வரை காவல்துறை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
இயக்குநர் ஷகீல் நூரானி, 'படே தில்வாலா' மற்றும் 'ஜோரு கா குலாம்' உள்ளிட்ட பிரபல ஹிந்தித் திரைப்படங்களை எழுதியும், இயக்கியும், தயாரித்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே