ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கர்தினால் தாக்கல் செய்த மற்றுமொரு மனுவை பரிசீலிக்க நீதிமன்றம் அனுமதி 

#Court Order #Colombo #Easter Sunday Attack
Prathees
3 years ago
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கர்தினால் தாக்கல் செய்த மற்றுமொரு மனுவை பரிசீலிக்க நீதிமன்றம் அனுமதி 

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டமா அதிபரிடம் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி  கர்தினால் மல்கம் ரஞ்சித் சமர்ப்பித்த மனுவை இன்று பரிசீலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த மனுக்களை மே 19ஆம்  திகதி பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4